யுவராஜ் சிங் மீதான நம்பிக்கையை கைவிடாத டெல்லி அணி
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 16 கோடிக்கு டெல்லி அணியினால் ஏலம் எடுக்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங், இதுவரை வெறும் 124 ஓட்டங்கள...


நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 16 கோடிக்கு டெல்லி அணியினால் ஏலம் எடுக்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங், இதுவரை வெறும் 124 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது டெல்லி அணி நிர்வாகத்தையும் ரசிகர்களையும் கவலையடையச்செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி கண்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் வெறும் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யுவராஜ் சிங்கிற்கு டெல்லி அணியின் தலைவர் டுமினி ஆதரவு தெரிவித்துள்ளார். போட்டிக்கு பிறகு அவர் கூறியதாவது: அவரை விமர்சிப்பது எளிதான விஷயம். அவர் எங்களின் மிகப்பெரிய வீரர். எனவே இந்த தொடரின் பிற்பகுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட சகீர் கான் இதுவரை களம் இறங்காதது குறித்து கேட்டபோது, சகீர் கான் 95 சதவீதம் நல்ல உடல் தகுதியுடன் உள்ளார். எனவே வரும் மே 1 ஆம் தேதி நடைபெறவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிவித்தார்.