அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ஜோர்ஜ் புஷ்ஷின் மகன்
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் மகன் ஜெப் தொடங்கினார். அவர் நேற்றைய தின...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_818.html

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் மகன் ஜெப் தொடங்கினார். அவர் நேற்றைய தினமே வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
2016-ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மகனும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபள்யூ புஷ் இன் இளைய சகோதரருமான ஜெப் புஷ் போட்டியிடுகிறார்.
இவர் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியாகியது. இந்த அறிவிப்புக்கு பின்னர் உடனடியாக தனது பிரச்சாரத்தை முறையாக புளோரிடா மாகணத்தின் மியாமியில் ஆரம்பித்தார் ஜெப்.
ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “எந்த மொழியில் பேசினாலும் எனது செயல்பாடுகள் எப்போதும் நேர்மறையாகவே இருக்கும். அடுத்து வரும் பல ஆண்டுகளில், உலக அரங்கில் அமெரிக்கா இதுவரை கண்டிராத உயரத்தை எட்டிவிட உழைப்போம்” என்றார்.
மேலும், “முழு மனதுடன் போட்டியில் களம் இறங்கியுள்ளேன். யாரையும் எதனையும் சார்ந்து இருக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளேன்” என்று தான் வந்திருக்கும் ‘புஷ்’ குடும்ப பின்னணியை குறிப்பிடாமல் அவர் பேசினார்.