சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை கைவிடும் மைத்திரி?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது வேறு சிரேஷ்ட உறுப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரி...


வெகு விரைவில் ஜனாதிபதி, கட்சித் தலைவர் பதவியை கைவிட்டு கட்சி சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்திரிக்கா குமாரதுங்கவுக்கே அப்பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் பல்வேறு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதனால் ஜனாதிபதி இப்பதவியை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.