கிழக்கு மாகாணத்தில் 684 பேருக்கு முதலமைச்சரால் நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் பல வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய பலருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் நிரந்தர நியமனம் வழ...

கிழக்கு மாகாணத்தில் பல வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய பலருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் நிரந்தர நியமனம் வழங்கி வைத்தார்.
உள்ளூராட்சி சபைகளில் பல்வேறுபட்ட தொழில்களுக்கு ஏராளமான இளைஞர், யுவதிகள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையிலேயே பணியாற்றி வந்தனர்.

தங்களின் குடும்ப நிலைமையை சரியாகக் கவனிக்க முடியாமல் குறைந்த வருமானம் போன்ற கஷ்டத்துடன் இத்தனை வருடமாக பணியாற்றியவர்களுக்கான நியமனமே முதலமைச்சரால் வாழங்கி வைக்கப்பட்டன.

குறிப்பிட்ட நியமனத்தில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு 131 நியமனங்களும், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு 178 நியமனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு 375 நியமங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மூன்று மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதுடன்,

கெளரவ அதிதிகளாக சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், ஆரியபதி கலபதி, மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்ன, உறுப்பினர்களான, ஆர்.துரைரட்ணம், ராஜேஷ்வரன், ஆர்.எம்.அன்வர், ஜே.லாஹீர் , சிப்லி பாறூக், முதலமைச்சின் செயலாளர் யூ.எல். அஸீஸ் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டு நியமனத்தை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

பல வருடமாக நிரந்தர நியமனம் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தொழில் புரிந்த ஊழியர்கள் மிகவும் சந்தோஷத்துடன் குறிப்பிட்ட நியமனத்தைப் பெற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

Related

இலங்கை 8796977697548910128

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item