நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீண்டநாள் மீன்பிட...


அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீண்டநாள் மீன்பிடிப் படகின் மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த இருவரே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த 16 இலங்கையர்களில் இருவர் அங்கிருந்து நேற்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சிலாபம் மற்றும் உடப்பு பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய இருவரே விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.