’எய்ட்ஸ், புற்றுநோயை’ குணப்படுத்தும் மருந்து எங்களிடம் இருக்கிறது’: அதிர வைத்த வட கொரிய அதிபர்
உயிர்க்கொல்லி நோய்களான எய்ட்ஸ், எபோலா, புற்றுநோய், செர்ஸ், மெர்ஸ் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் ஒரே ஒரு மருந்து தங்களிடம் இருப்பதாக வட கொ...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_131.html

உயிர்க்கொல்லி நோய்களான எய்ட்ஸ், எபோலா, புற்றுநோய், செர்ஸ், மெர்ஸ் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் ஒரே ஒரு மருந்து தங்களிடம் இருப்பதாக வட கொரிய அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வட கொரிய நாட்டின் அரசு செய்தி நிறுவனம் ஒன்று அண்மையில் வெளியிட்டுள்ள செய்தியில், எய்ட்ஸ் நோய் மட்டுமன்றி உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள எபோலா, புற்றுநோய், செர்ஸ் மற்றும் மெர்ஸ் உயிர் கொல்லி நோய்களை குணப்படுத்தக்கூடிய அற்புதமான மருந்தை வட கொரிய அரசாங்கம் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பல்வேறு வகையான உரங்கள் மற்றும் உணவுப்பொருட்களிலிருந்து ginseng வகை மருந்து தயாரிக்கப்பட்டு, அதற்கு Kumdang-2 என்ற பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால், குறிப்பாக எந்த வகையான மூலக்கூறுகளிலிருந்து அந்த அற்புதமான மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்ற எந்த தகவலையும் அந்த செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.
இந்த மருந்தை பெறும் நோயாளிகளில் பாதி பேர் முற்றிலும் குணமடைந்துவிட்டதாக வட கொரியாவின் அதிபரான கிம்-யோன் அன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், உலக அளவில் இந்த செய்தி பரபரப்பாக வெளியிட்டிருந்தாலும், இதில் எந்த அளவிற்கு உண்மை தண்மை இருக்கிறது என்பது தொடர்பான ஆதரங்களை அந்த செய்தி நிறுவனமோ, அதிபரோ வெளியிட வில்லை என சர்வதேச செய்தி தாள்கள் குறிப்பிட்டுள்ளன.
இதே போல், கடந்த 2000ம் ஆண்டு வட கொரியாவின் முன்னாள் அதிபரும், கிம்-யோன் அன்னின் தந்தையுமான கிம்-யோன் இல் ஒரு அற்புதமான ஹேம்பர்க்கர் உணவு வகையை கண்டுபிடித்துள்ளதாகவும், அதை உண்டு வரும் தான் இதுவரை கழிவறைக்கு செல்லவே இல்லை என பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.