தேசிய அடையாள அட்டையை இலகுவாக பெற புதிய முறை விரைவில்
தேசிய அடை யாள அட்டை யை இலகுவா கப் பெறக் கூடிய புதிய வழிமுறை யொன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக உள்நாட்டலுவல்கள் மீன்பிடித்துறை அமைச்சர் ஜோச...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_388.html

தேசிய அடை யாள அட்டை யை இலகுவா கப் பெறக் கூடிய புதிய வழிமுறை யொன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக உள்நாட்டலுவல்கள் மீன்பிடித்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். சகல நபர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடையாள அட்டையற்றவர்களுக்கு துரிதமாக அடையாள அட்டை வழங்குவதற்கான விசேட நடமாடும் சேவை ஜா-எல பகுதியில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், அடையாள அட்டை பெறுவதற்காக சகல நபர்களுக்கும் இருக்கும் உரிமையை உறுதிசெய்ய இருக்கிறோம். அடையாள அட்டை பெறுவதற்கான வசதியை மேலும் இலகுபடுத்துவதற்கான முறையொன்றை தயாரித்து வருகின்றோம்.
விண்ணப்ப படிவங்கள் இருவார காலத்தினுள் கிடைத்திருக்காவிட்டால் அதற்கு கிராம சேவகரும் அடையாள அட்டை திணைக்கள ஆணையாளருமே பொறுப்புகூற வேண்டும் என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் சரத்குமார, பிறப்புச் சான்றிதழ் இன்மையினால் அடையாள அட்டை வழங்குவதை இனியும் நிறுத்த முடியாது. இதற்காக மாற்று ஆவணங்களை உறுதிப்படுத்தி அதன் பிரகாரம் அடையாள அட்டை பெறும் உரிமையை உறுதிசெய்ய இருக்கிறோம் என்றார்.


Sri Lanka Rupee Exchange Rate