கம்பஹாவில் மைத்திரிக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றி எனக்குத் தெரியாது!– அனுர யாபா
கம்பஹாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின...


மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஏகமனதாக தீர்மானித்தமை குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு ஓர் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என சிங்கள ஊடகமொன்று தொலைபேசி ஊடாக அனுர பிரியதர்சன யாப்பாவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் அவரது கம்பஹா இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பிலான செய்திகள் தகவல்கள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்வாறான ஓர் தீர்மானம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.