சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த ஜோன் கெர்ரி ஜெனீவா வைத்தியசாலையில் அனுமதி!

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரான ஜோன் கெர்ரி பிரான்ஸின் ஸ்கியோன்ஷெயிர் நகரில் சைக்கிளில் பிரயாணம் செய்த போது விபத்தில் சிக்கியதாகவு...







அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரான ஜோன் கெர்ரி பிரான்ஸின் ஸ்கியோன்ஷெயிர் நகரில் சைக்கிளில் பிரயாணம் செய்த போது விபத்தில் சிக்கியதாகவும் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப் பட்ட இடத்துக்கு அண்மையில் தான் விபத்தின் போது கெர்ரிக்குக் காயம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

தற்போது ஜெனிவா வைத்தியசாலையில் ஆரோக்கியமாக ஓய்வெடுத்து வரும் அவர் மேலதிக சிகிச்சைக்காக பொஸ்டனிலுள்ள மஸ்ஸச்சுஸெட்ஸ் பொது வைத்திய சாலைக்கு இன்று ஞாயிறு மாலை விமானம் மூலம் செல்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கெர்ரிக்கு ஏற்பட்ட காயமானது மிகத் தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்ற போதும் அவர் சிகிச்சைக்குப் பின்னர் சில மாதங்கள் கட்டாய ஓய்வு எடுப்பது அவசியம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்திடீர் விபத்தால் ஏற்கனவே திட்டமிடப் பட்டிருந்த ஸ்பெயினுக்கான கெர்ரியின் உத்தியோகபூர்வப் பயணம் ரத்தாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடெனின் மகன் பியூ பிடென் தனது 46 ஆவது வயதில் மூளைப் புற்று நோய் காரணமாக நேற்று சனிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியும் அமெரிக்க மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈராக் போரின் முன்னால் போராளியாகவும் டெலவாரேவின் அட்டார்னி ஜெனரலாகவும் பதவி வகித்த பியூ பிடென் கடந்த 7 வருடங்களாக இந்தப் புற்றுநோய்ப் பாதிப்புக்குச் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மறைவுக்கு அதிபர் ஒபாமா மற்றும் முன்னால் அதிபர் பில் கிளிங்டன் ஆகியோர் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.

Related

உலகம் 2567485053925197868

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item