கோட்டாபய ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று (20) வாக்குமூலமளித்து வருகின்றார். லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் ந...


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று (20) வாக்குமூலமளித்து வருகின்றார்.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காகவே முன்னால் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (20) வாக்குமூலம் பதிவு செய்கின்றது.
அவரது மனைவியான சஷி வீரவங்ச போலி கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தயாரித்தமை தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்படுகின்றது.
சஷீ வீரவங்ச போலி கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை தயாரித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.