இந்தியப் பிரதமர் மோடியிடம் தமிழர் விடுதலைக் கூட்டணி விடுக்கும் வேண்டுகோள்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு, கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_762.html

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு, கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு அவசரமாகக் கூடியது. இது குறித்து தமிழர் விடுதலை கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பிரதம மந்திரி கௌரவ நரேந்திர மோடியின் விஜயம், டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் அரைநூற்றாண்டின் பின்னரான யாழ்ப்பாணத்திற்கான வருகையின் பின்னராதலால் மிகமுக்கியமானதொன்றாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் அமைகிறது. அதோடு இணைத்துக் கொண்டால் இன்னோர் நிகழ்வாக எமது நாட்டின் சரித்திரத்திலும் மறக்கமுடியாத நாளாகக் திகழும்.
நாம் இந்தியாவை மிக்க நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் அரை நூற்றாண்டுக்கு மேலாக எமது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண எதிர்பார்த்து நிற்கின்றோம். பல கோடி கோடி வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டு ஊடகங்களில் அச்சிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்ததோடு மாநாடுகளிலும், பேச்சுவார்த்தைகளிலும் எமது பிரச்சினை உலக நாடுகள் முழுவதும் அறிந்து கொண்டதே. தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரை எமது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்திய அரசியல் முறையில் ஒரு தீர்வை வற்புறுத்தி வருகிறோம். இதுசம்பந்தமாக பல ஆரம்ப நடவடிக்கைகளையும் செய்துள்ளோம். ஆகவே,
1. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இங்கு எமது நாட்டின் ஜனாதிபதி மரியாதைக்குரிய மைத்திரிபால சிறிசேன அவர்களும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலரால் விரும்பப்படுகின்ற இந்திய அரசியல் முறையிலான ஒரு தீர்வை எமது பிரச்சினைக்கு முடிவாக இணைந்து பிரகடனப்படுத்த வேண்டும் என கோருகிறது.
2. இலங்கை நாட்டு மக்கள் சார்பாக இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும், இந்தியப் பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களுக்கும் பல சந்தர்ப்பங்களில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு ஓடோடி வந்து உதவியது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அத்தகைய உதவிகளை எதிர்பார்ப்பதோடு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது நன்றிகளைத் தெரிவிக்கிறது. சுனாமியின் போது ஒரு சில மணி நேரங்களுக்குள் தாமதமின்றி வந்து எமது மக்களுக்கு உதவியதையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளோடு அத்தியாவசியமான பல பொருள்களையும் தந்துதவியதை மிக்க நன்றியுடன் நினைவு கூருகின்றது.
3. பல நூற்றுக்கணக்கான சிலவேளைகளில் ஆயிரக்கணக்காகவும் இருக்கலாம் - ஆண், பெண், குழந்தைகள் குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்கள் அனுபவிக்கின்ற துன்பமான ஒரு விடயத்தை பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறது. அவரது அரசு இப்பொறுப்பை ஏற்று தம் உடல்களில் பல் வேறு பாகங்களிலும் பரவிப் புதைந்து கிடக்கின்ற உலோகத் துண்டுகளை சுமந்து நிற்கும் அப்பாவி மக்களின் சுமையை இறக்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றது. இது ஒரு சிரமமான வேலையாக இருந்தாலும் வைத்திய நிபுணர்களை அனுப்பி இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு மத்திய குழு வேண்டிக் கொள்கிறது.
4. இந்தியப் பிரதமருக்கு பல்வேறு ஸ்தாபனங்களால் விடுக்கப்படும் கோரிக்கைகள் அவருக்கு மனச் சங்கடத்தைக் கொடுக்க கூடாதென்பதையும் முக்கிய விடயங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒற்றுமை வற்புறுத்தப்பட வேண்டும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு கேட்டுக் கொள்கிறது.

பிரதமர் மற்றும் அவரது குழுவினரின் இலங்கை விஜயம் திருப்திகரமாக அமைய வேண்டுமெனவும், இதுபோன்ற பல விஜயங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி வாழ்த்துகிறது. என்றுள்ளது.

Sri Lanka Rupee Exchange Rate