மரங்களுடன் உடலுறவு கொண்டு நிர்வாணமாக ஓடும் இளைஞர்கள்: பகீர் தகவல்
அமெரிக்காவில் ‘பிளாக்கா’ என்ற கொடிய போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் மரங்களுடன் உடலுறவு கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்படுவதாக பகீர் செய்...


அமெரிக்காவில் ‘பிளாக்கா’ என்ற கொடிய போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் மரங்களுடன் உடலுறவு கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்படுவதாக பகீர் செய்திகள் வெளியாகியுள்ளன.
South Florida மாகாணத்தில் ‘Flakka’ என்ற போதை பழக்கத்திற்கு அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் பலியாகி வருவதாக Broward Sheriff காவல் துறை அலுவலகத்திற்கு தொடர் புகார்கள் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, விசாரணையில் இறங்கிய காவல் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பிளாக்கா போதை பொருளை உபயோகிக்கும் இளைஞர்கள் பொது இடங்களில் ஒழுக்கக்கேடான செயல்பாடுகளில் ஈடுபடுவது பொலிசாருக்கு தெரியவந்தது.
இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளாக்கா போதை மருந்தை உட்கொண்ட ஒரு நபர் தன்னை ஒரு சூப்பர் மேனாக கருதிக்கொண்டு அசாத்தியமான செயல்களில் ஈடுபடுகிறான்.
மக்கள் தன்னை துரத்தி வருவதாக அவர்களே கற்பனை செய்துக்கொண்டு பொது இடங்களில் நிர்வாணமாக ஓடுகிறார்கள். சில நேரங்களில், அவர்கள் மரங்களுடன் கூட தகாத உடலுறவில் ஈடுபடுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதை விட கொடுமையாக, இந்த போதை மருந்தை உட்கொண்டால் சில நேரம் சித்த பிரம்மை பிடித்ததுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் இது உயிரையும் சில நேரங்களில் பறித்துவிடுகிறது.
அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்த போதை மருந்தை சிறிதளவு உட்கொண்டாலே, மூளையின் செயல்பாட்டையே மாற்றி அதீத செயல்களில் ஈடுபட தூண்டுகிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட Broward பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதுடன் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் மத்திய Broward நகர் பகுதியில் கடந்தாண்டு பிளாக்கா போதை மருந்தை பயன்படுத்துவர்கள் குறித்து 200 புகார்கள் கிடைத்தது என்றும் அது இந்தாண்டு 5 மாதத்திற்குள் இரட்டிப்பாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை இந்த போதை பழக்கத்தால் சுமார் 16 பேர் இறந்துள்ளனர்.
இந்த போதை பழக்கம் கேளிக்கை விடுதிகளை தொடர்ந்து தற்போது பள்ளிக்குழந்தைகள் மத்தியிலும் பரவும் அபாயம் உள்ளதால் , இதை முற்றிலும் தடுப்பது குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பொலிஸ் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.