எமிஜெக்சனின் உயிரைக் காப்பாற்றிய நகைச்சுவை நடிகர்
படப்பிடிப்பு தளத்தில் நடிகை எமி ஜெக்ஸனின் உயிரைக் காப்பாற்றினார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். ஐ படத்துக்குப் பிறகு உயதநிதி ஸ்டாலினுடன் சே...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_788.html

படப்பிடிப்பு தளத்தில் நடிகை எமி ஜெக்ஸனின் உயிரைக் காப்பாற்றினார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். ஐ படத்துக்குப் பிறகு உயதநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து மான் கரேத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் எமி ஜெக்ஸன்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது வருகிறது. கேரளாவில் உள்ள மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது, எமிஜெக்சன் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்வது போலவும் உதயநிதி ஸ்டாலின் அதை ஓட்டுவது போலவும் காட்சி.
ஆனால் படபிடிப்பு தளத்தில் எமிஜெக்சன் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்த போது எதிர்ப்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் தனது கட்டுபாட்டை இழந்து அருகில் இருக்கும் மலைக்கு விளிம்பில் சென்றது உடனடியாக அருகில் நின்ற நகைச்சுவை நடிகர் கருணாகரன் சுதாரித்து கொண்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தி எமி ஜெக்சனை காப்பாற்றினார்.
உடனடியாக படிப்பிடிப்பு நிறுத்தபட்டது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள எமிஜெக்சன், ‘என் உயிரை காப்பாற்றிய கருணாவிற்கு நன்றி’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.