அனைத்து இன மக்களது நம்பிக்கையை வெற்றிகொள்ள வேண்டியது அவசியம் – ஜனாதிபதி

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தோல்வியடைந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டியது எமது பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிப...

அனைத்து இன மக்களது நம்பிக்கையை வெற்றிகொள்ள வேண்டியது அவசியம் – ஜனாதிபதி
ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தோல்வியடைந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டியது எமது பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

கட்சியின் தலைவர் பதவியை ஏற்ற நாள் முதல் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட உறுப்பினர்களின் சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கட்சியின் யாப்பில் திருத்தம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதிகள் முன்னாள் பிரதமர்கள் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்ததாக ஜனாதிபதி கூறியுள்ளார்

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏன் தோல்வியடைந்தது என்பதை நன்கு உணர்ந்து அனைத்து இன மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பிளவுபடாமல் ஒன்றாக ஒரே மேடையில் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 2211531595504876226

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item