நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று (26) மீண்டும் பூகம்பம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த பூகம்பம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு ...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_128.html

நேபாளத்தில் இன்று (26) மீண்டும் பூகம்பம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த பூகம்பம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தினை அடுத்து எவரெஸ்ட் சிகரத்தின் சில மலைப்பகுதிகள் சரிந்து வீழ்வதை அவதானித்ததாக, மலை ஏறிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறான போதும் இன்று பதிவான பூகம்பம் தொடர்பில் சேதவிபரங்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை நேற்றைய தினம் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தில் 2000 இற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதுடன் மீட்புப்பணிகள் தொடர்கின்றன.