டோனி இடத்திற்கு தகுதியானவர் யார்? சொல்கிறார் கோஹ்லி
டெஸ்ட் போட்டியில் டோனியின் விக்கெட் கீப்பிங் பணியை யாரிடம் கொடுக்கலாம் என்பது பற்றி டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள...


உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இந்தத் தொடரில் டோனி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவராக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் டோனியின் விக்கெட் கீப்பிங் பணியை யார் தொடருவார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இளம் வீரரான விர்த்தியமான் சஹா தகுதியானவர் என்று விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், விக்கெட் கீப்பிங் பணியில் டோனியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது. அந்த பணி மிகவும் பொறுப்பானது. ஆனால் அதற்கு விர்த்தியமான் சஹா தகுதியானவர் என்று கருதுகிறேன்.
மேலும், இளம் வீரரான அவர் இன்னும் 5 ஆண்டுகளுக்கு விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.