நாய்களுடன் சேர்ந்து ‘செல்ஃபி’ எடுக்க கூடாது: சுவிஸ் அதிரடி தடை
சுவிட்சர்லாந்தில் உள்ள வாலெஸ் மண்டல பனிமலை பகுதிகளில் நாய்களுடன் சேர்ந்து ‘செல்ஃபி’ புகைப்படங்களை எடுக்க நகராட்சி நிர்வாகம் அதிரடியாக தட...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_229.html

வாலெஸ் (Valais) மண்டலத்தில் உள்ள Zermatt என்ற பனிச்சறுக்கு பகுதி மிகவும் பிரபலமானது.
இந்த பகுதிக்கு பனிச்சறுக்கு மற்றும் சுற்றுலாவிற்கு வருபவர்கள் Saint Bernard என்ற உயர் ரக நாய்களுடன் ‘செல்ஃபி’ (Selfie) புகைப்படங்களை எடுத்துக்கொள்வர்.
Saint Bernard நாய்கள் மீட்பு பணிகளில் பெரிதும் உதவி செய்வதால், அவற்றுடன் சேர்ந்து பல கோணங்களில் செல்ஃபி படங்கள் எடுக்க நேரிடும்போது நாய்கள் பெரும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக புகார் எழுந்தது.
மிகுந்த குளிர் உள்ள பகுதிகளில் நாய்களை மணிக்கணக்கில் உணவில்லாமல் நிற்க வைத்து புகைப்படும் எடுக்கையில், அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வெளியாகின.
இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்த Swiss Animal Protection (SAP) என்ற அமைப்பு, இதே வகையான 5 நாய்கள் மோசமான நிலையில் சிதைந்துபோன அறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து, நாய்கள் வதைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் SAP விடுத்தது.
Zermatt பகுதியில் ஆய்வு நடத்திய நகராட்சி நிர்வாக அதிகாரிகள், அறைகளில் தங்க வைக்கப்படிருந்த நாய்களை மீட்டதுடன், அந்த பகுதியில் நாய்களுடன் செல்ஃபி படங்கள் எடுப்பதற்கு தடை விதிப்பதாக அறிவித்தனர்.
மேலும், இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகளவில், மிருகங்கள் வதைக்கப்படுவதற்கு கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதில் சுவிட்சர்லாந்த் அரசு முன்ணணி நாடுகளில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate