ஜேர்மனி அதிபரை ஒரு போதும் மன்னிக்க மாட்டோம்: துருக்கி அரசு கண்டனம்

முதல் உலகப்போரில் அர்மீனியர்கள் மீது துருக்கி அரசு நடத்தியது ‘இனப்படுகொலை’ தான் என கருத்து கூறிய ஜேர்மனி அதிபருக்கு துருக்கி அரசு கடும் ...


முதல் உலகப்போரில் அர்மீனியர்கள் மீது துருக்கி அரசு நடத்தியது ‘இனப்படுகொலை’ தான் என கருத்து கூறிய ஜேர்மனி அதிபருக்கு துருக்கி அரசு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளது.

1915ம் ஆண்டு துருக்கி அரசால் சுமார் 15 லட்சம் அர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் Joachim Gauck, துருக்கி அரசு அர்மீனியர்கள் மீது நடத்தியது ‘இனப்படுகொலை’ (Genocide) தான் என குற்றம் சாட்டினார்.

ஜேர்மனி அதிபரின் இந்த கருத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனங்களை தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், துருக்கி மக்கள் மீது குற்றம் சுமத்த ஜேர்மனி அதிபருக்கு எந்த உரிமையும் கிடையாது.

ஜேர்மனி அதிபரின் கருத்து, துருக்கி நாட்டு ஒட்டுமொத்த மக்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், Joachim Gauck கூறிய கருத்தை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அர்மீனியர்கள் கொல்லப்பட்டது போர் காரணங்களால் மட்டும் தான் என்றும் அதற்கு துருக்கி அரசு எந்த பொறுப்பும் ஏற்க முடியாது என துருக்கி அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

Related

தலைப்பு செய்தி 381192701362826699

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item