அத்தநாயக்க மீண்டும் ஐ.தே.கட்சியில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்து கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவ...


ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ள போதிலும், கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க இறுதி தீர்மானத்தை அறிவிக்காததால், அத்தநாயக்க கட்சியில் இணைவது தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
எனினும் தான் எடுத்த அந்த முடிவு குறித்து அவர் பல சந்தர்ப்பங்களில் கவலையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி தலைவர்கள் சிலர் அத்தநாயக்கவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதுடன் அவர்களே அவரை மீண்டும் கட்சியில் இணைக்கும் பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்ததாக கூறப்படுகிறது.