கோட்டாவுடன் தொலைபேசியில் சீறிப்பாய்ந்தார் மகிந்த
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி அடைந்து விரட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சே கடும் விரக்தியில் உள்ளார். தோல்விக்குப் பிறகு தன் மீதும், தன் க...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_167.html

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி அடைந்து விரட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சே கடும் விரக்தியில் உள்ளார். தோல்விக்குப் பிறகு தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் அடுக்கடுக்காக கூறப் படும் பல்வேறு குற்றச்சாட்டு களால் ராஜபக்சே நிலை குலைந்து போய் உள்ளார்.
குறிப்பாக விடுதலைப் புலிக ளின் பல டன் தங்கத்தை அவர் அபகரித்து கொண்டதாக எழுந்துள்ள புகார் ராஜ பக்சேயை கண்ணீர் விட வைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபாயயை போனில் தொடர்பு கொண்டு பேசி னார். அப்போது கோத்தபாய, ’என்னை வீட்டு காவலில் வைத்துள்ளனர். என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை’ என்று கூறி இருக்கிறார்.
இதையடுத்து ராஜபக் சேக்கும், கோத்தபாயக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோத்தபாயவிடம் கடும் கோபத்தில் ராஜபக்சே எரிந்து விழுந்துள்ளார். ’என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீங்கள்தான் என் அரசியல் வாழ்வை அழித்து விட்டீர்கள்’ என்று கோபத்தில் கத்தியுள்ளார்.
ராஜபக்சேவை அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் சமரசம் செய்துள்ளார். அப்போது, அவரிடம் ராஜபக்சே, ’என்னுடைய 45 வருட அரசியல் வாழ்க்கை என் சகோதரர்களாலும், என் மூன்று மகன்களின் நடத்தையாலும் அழிந்து விட்டது. எனக்கு வாய்த்த மகன்கள் இப்படிஇருக் கிறார்கள். நான் என்ன செய்வேன்?’ என்று புலம்பியுள்ளார்.
மகன்கள் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகளால் அவர் மனம் உடைந்து போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கட்சி அலுவலகம் சீல் வைக்கப் பட்டிருப்பது அவருக்கு மேலும் ஒரு பலத்த அடியை கொடுத்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate