பேருவள: சந்திரிக்காவின் வாகனம் மீதான தாக்குதல் விசாரணையை ஆரம்பிக்கிறது CID
கடந்த மாதம் 26ம் திகதி பேருவளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுத்துவிட்டு இராப்போசன நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த வேளை அவ்வீட்...


கடந்த மாதம் 26ம் திகதி பேருவளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுத்துவிட்டு இராப்போசன நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த வேளை அவ்வீட்டின் மீதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வாகனம் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகாவின் வாகனத்தின் மீதும் கல் வீசு தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணியில் நகரசபை தலைவர் மில்பர் கபூர் தொடர்பு பட்டிருப்பதாக முன்னரே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.