எதிர்க்கட்சித் தலைவராக நிமல்?
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நிமால் சிறிபால டி ச...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_489.html
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக அந்த கட்சியின் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட திட்டமிட்டிருந்ததுடன் அவர் தற்போது அந்த எண்ணத்தை கைவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் 113 என்ற பெரும்பான்மை பலத்தை கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரத்திற்கு சவால் விட சுதந்திரக்கட்சியின் திட்டமிட்டிருந்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate