கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியின் நிர்மாணப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்
கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியின் 3 ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_652.html

கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியின் 3 ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரையான வீதியின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக சீனா நிதி உதவி வழங்குகின்றது.
இந்த வீதியின் கடுவலையிலிருந்து கடவத்தை வரையான பகுதி, கடந்த ஜூன் மாதம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Sri Lanka Rupee Exchange Rate