உமாஒயா திட்டம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை விரைவில்
உமாஒயா திட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை அடுத்த வாரமளவில் தயாரிக்கப்படவுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் ச...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_710.html

உமாஒயா திட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை அடுத்த வாரமளவில் தயாரிக்கப்படவுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை உபகுழு நாளை மறுதினம் (28) பாராளுமன்றத்தில் கூடவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க கூறியுள்ளார்.
உமா ஒயா திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றாடல் அறிக்கை மற்றும் நிபுணர்குழு அறிக்கை ஆகியவற்றை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவில் 3 அமைச்சர்களும், ஊவா மாகாண முதலமைச்சரும் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.
இந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் உமாஒயா திட்டம் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கையினை அமைச்சரவை தீர்மானிக்கவுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate