மகனின் கண்ணில் புற்றுநோய்....கண்டுபிடித்த ‘அப்பிள்’ போன்: தாயின் உருக்கமான பேட்டி
பிரித்தானியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனிற்கு இருந்த கண் புற்றுநோயை அப்பிள் போன் மூலமாக முன்கூட்டிய கண்டுபிடித்த நிகழ்வை உருக்கமுட...


இங்கிலாந்தில் உள்ள Birmingham நகரை சேர்ந்த Stacey என்பவர் தனது 4 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இவர் சமீபத்தில் குடும்பத்தினருடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தனது பிள்ளைகளை அப்பிள் போனில் வித விதமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
பின்னர், பிள்ளைகளுடன் ரயிலில் பயணிக்கும்போது, தனது அப்பிள் போனிலிருந்த ஒவ்வொரு படத்தையும் பார்த்து வந்துள்ளார்.
அப்போது, தனது 20 மாத குழந்தையான Zak Sutherland-ன் புகைப்படத்தை பார்த்தவுடன் திடீரென அதிர்ச்சியுற்ற அவர் மீண்டும் கவனத்துடன் அந்த புகைப்படத்தை பார்த்துள்ளார்.
புகைப்படத்தில் தனது மகனின் இடது கண்ணில் வெள்ளையாக ஒரு புள்ளி இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
அதேபோல், இடது கண் ஓரத்தில் தசைபிடிப்பும் இருந்துள்ளதை அந்த புகைப்படம் மூலம் தெரிந்துக்கொண்டார்.
உடனே தனது கணவருக்கு தெரியப்படுத்திய அவர், அங்குள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சென்று மகனை பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது குழந்தையின் இடது கண்ணை Retinoblastoma என்ற அரிதான புற்றுநோய் தாக்கியுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து புற்றுநோயின் தாக்கத்தை குறித்து விசாரித்தபோது, நோயை பற்றி ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டதால் அதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதன் பின்னர், Queen Elizabeth மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் புற்றுநோயிற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
புற்றுநோய் குறித்து ஆரம்பத்திலேயே தெரிந்துக்கொண்டதால் அதை 98 சதவிகிதம் குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய Stacey, தற்போது 4 வாரத்திற்கு ஒருமுறை தன் மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் தனது பிள்ளையிடம் முன்னேற்றம் தெரிவதாக கூறியுள்ளார்.
தனது அப்பிள் போன் உதவியால் தான் அந்த கொடிய நோயை ஆரம்பக்கட்டத்திலேயே தெரிந்துக்கொண்டதாகவும், இல்லை என்றால் புற்றுநோய் மோசமாக வளர்ந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த அபாய கட்டத்தை தற்போது தாண்டிவிட்டதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

