ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட அமெரிக்க மேலும் ராணுவ படைகளை அனுப்பாது: ஒபாமா
வெளிநாடுகளுக்கு தற்போது எந்த படைகளையும் அனுப்பும் திட்டம் எதுவும் அமெரிக்க நிர்வாகத்திற்கு இல்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்...

வெளிநாடுகளுக்கு தற்போது எந்த படைகளையும் அனுப்பும் திட்டம் எதுவும் அமெரிக்க நிர்வாகத்திற்கு இல்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடும் ஆற்றல் உள்ளூர் படைகளுக்கு இருக்க வேண்டும் என்றும் கூறினார். நேற்று சிறப்பு விஜயமாக பென்டகன் வந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது அமெரிக்க ராணுவதலைமையிலான படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவதால் மட்டுமே பயங்கரவாதத்திற்கு எதிரன நீண்ட கால தீர்வு கிடைக்காது.
நாம் உள்ளூர் பாதுகாப்பு படைகளை உருவாக்க வேண்டியது அவசியம். ஈராக்கில் மேலும் ராணுவப் படைகளை அனுப்ப முடியாது ஆனால் அதற்குப் பதிலாக அங்குள்ள ராணுவபடைகளை அமெரிக்க படைகளோடு இணைந்து செயல்பட பயிற்சி அளிக்கப்படும் மேலும் ஈராக் படைகளை மேம்படுத்துவதன் மூலமே ஐ.எஸ். பயங்கரவாத பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றார்.