கொலையில் முடிந்த புத்தாண்டு! முல்லைத்தீவில் அசம்பாவிதம்
புத்தாடைகளை பெற்றுக்கொள்வதில் அண்ணன் - தம்பி இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிவடைந்துள்ளது. தாய் வாங்கிக் கொடுத்த புது ஆடையை பக...


தாய் வாங்கிக் கொடுத்த புது ஆடையை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடே இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
முல்லைத்தீவு - முல்லியாவெலி கண்ணீரூற்று பகுதியில் அண்ணன் - தம்பி இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற இந்த மோதலில் 19 வயதான மூத்த சகோதரர் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.