அமெரிக்காவின் சிறந்த அதிபராகும் தகுதி ஹிலாரிக்கு உண்டு!:ஒபாமா
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அந்நாட்டின் அதிபராகப் போட்டியிடவுள்ள முன்னால் அதிபர் கிளிங்டனின் துணை...

வெகு விரைவில் 2016 ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஹிலாரி கிளிங்டனைத் தனது அதிபர் வேட்பாளராக இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்படி அறிவிக்கவுள்ளது. கடந்த அதிபர் தேர்தலில் குறைந்த வாக்குகளுடன் தோல்வியைத் தழுவிய 67 வயதாகும் ஹிலாரி கிளிங்டன் 2016 தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் அவருக்குத் தற்போதைய அதிபரான ஒபாமாவின் பூரண ஆதரவு கிடைத்துள்ளது. மேலும் அமெரிக்காவை முன் நடத்திச் செல்லும் ஹிலாரியின் கண்ணோட்டம் மிகத் தெளிவாகவே இருப்பதாக பனாமா மாநாட்டில் செய்தியாளர் மாநாட்டில் சனிக்கிழமை ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டே ஹிலாரி ஓர் வல்லமை மிக்க போட்டியாளராகத் திகழ்ந்தார் எனவும் பொதுத் தேர்தலில் தனது மிகப் பெரிய ஆதரவளாராக விளங்கியவர் எனவும் கூறிய ஒபாமா, ஹிலாரி ஓர் மிகச் சிறந்த பாதுகாப்புச் செயலாளராகக் கடமை புரிந்தவர் மற்றும் எனது நண்பர் கூட என்றும் உரைத்தார். இறுதியாக ஓர் மிகச் சிறந்த அதிபராக விளங்கக் கூடிய ஹிலாரி தனது வெளியுறவுக் கொள்கைகளையும் திறமையாகக் கையாளக் கூடியவர் எனவும் ஒபாமா குறிப்பிட்டிருந்தார். இதேவேளை ஹிலாரி கிளிங்டன் தனது 2 ஆவது அதிபர் தேர்தல் பிராச்சாரத்தை 2008 ஆம் ஆண்டில் கையாண்டதை விட வித்தியாசமான அணுகுமுறையில் கையாள்வார் எனவும் குறிப்பாக அமெரிக்க நடுத்தர வர்க்கக் குடும்பங்களினது முன்னேற்றத்தையும் அரசாங்கத்தை வழிநடத்தக் கூடிய திறமைகளையும் இலக்காகக் கொண்டு அவரது பிரச்சாரம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.