மசூதிகள் எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்கள் தான்: சுப்பிரமணியன்

மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்கள் தான் என பாஜக தலைவர் சுப்பிரமணியன...

மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்கள் தான் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மசூதிகள் ஒன்று மதம் சார்ந்த இடம் இல்லை. அவை வெறும் கட்டிடங்கள் தான். அந்த கட்டிடங்களை எந்நேரத்திலும் இடிக்க முடியும்.
என் கருத்தை ஏற்காத யாருடனும் விவாதிக்க நான் தயார் என்றார்.
சாமியின் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  சாமியின் கருத்துக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போன்று அஸ்ஸாம் மாநில பாஜக ஒதுங்கிக் கொண்டது. சாமியின் கருத்துக்கு அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கண்டனம் தெரிவித்துள்ளார்
. மேலும் அம்மாநிலத்தில் உள்ள க்ரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி என்ற விவசாயிகள் அமைப்பு அளித்த புகாரின்பேரில் சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related

உலகம் 6901783959514265973

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item