லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வெளிநாட்டுக்கு விஜயம்
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த 19ம் திகதி உத்தி...


கடந்த 19ம் திகதி உத்தியோகபூர்வ தேவை ஒன்றுக்காக அவர் இவ்வாறு வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 22ம்திகதி அவர் நாடு திரும்புவார் என ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் நேற்று நாடாளுமன்றிற்கு சமூகமளிக்கமாறு அழைத்திருந்தார்.
எனினும், அவர் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்ட காரணத்தினால் ஆணைக்குழுவின் தலைவரே சபாநாயகர் சமல் ராஜபக்சவை சந்தித்தார் என தெரிவிக்கப்படுகிறது.