சில அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு கிடையாது!- முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க
எனது பதவி பறிபோனாலும் நான் உண்மையைச் சொல்வேன். சில அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு கிடையாது என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரி...


எனது பதவி பறிபோனாலும் நான் உண்மையைச் சொல்வேன். சில அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு கிடையாது என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேச சபையின் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படவிருந்தது. எனினும் இதுவரையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு என்னவாயிற்று என நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் கேள்வி எழுப்புகின்றேன்.
நாட்டின் சில அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு கிடையாது, அதிகார மோகம் கொண்டுள்ளனர். பின்னால் இருந்து முதுகில் குத்தும் செயற்பாடுகள் வழமையாகிவிட்டன.
கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். சந்திரிகா ஆட்சி செய்த காலத்தில் மஹிந்தவிற்கு எதிராக கோள் சொல்லி மஹிந்தவிற்கு எதிராக செயற்பட்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் இவர்கள் செயற்படக் கூடும். எனது பதவி பறிபோனாலும் நான் உண்மையைச் சொல்வேன்.
தற்போதைய அரசாங்கம் பெரும் எண்ணிக்கையிலானவர்களை தொழில்களிலிருந்து வெளியேற்றியுள்ளது. எமது கட்சியினருக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.
எங்கே எமது எதிர்க்கட்சி, இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்