ராஜபக்சாக்களின் மூன்று நிகழ்வுகளுக்கான செலவு 18,592,750 ரூபாய்கள்
2010ம் ஆண்டு முதல் ராஜபக்சாக்களால் மூன்று நிகழ்வுகளுக்கு மாத்திரம் சுமார் ஒரு கோடியே எண்பத்தாறு லட்சம் (18,592,750) ரூபாய்கள் செலவிடப்பட்டுள...


2010ம் ஆண்டு முதல் ராஜபக்சாக்களால் மூன்று நிகழ்வுகளுக்கு மாத்திரம் சுமார் ஒரு கோடியே எண்பத்தாறு லட்சம் (18,592,750) ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் விசாரணைக்குழுவின் ஆவணங்களில் இருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செலவுகள் யாவும் ஜனாதிபதியின் மாளிகையின் நிமித்தமே செய்யப்பட்டுள்ளன.
இதன்படி 2010ம் ஆண்டு 5ம் மாதம் 4ம் திகதியன்று ஜனாதிபதி மாளிகைக்கு 25ஆயிரத்து 200 ரூபா பெறுமதியான 600 கிலோ அரிசி அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத்தவிர நிகழ்வு ஒன்றுக்காக 1,810,654 ரூபாய்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வழங்கப்பட்டுள்ளன.
2012ம் ஆண்டில் சிறுவர்களுக்கான சாப்பாடு பொதிகளுக்காக 702,087 ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
2014ல் உள்ளுர் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் பிரியங்கர ஜெயரட்னவுக்கு மே தினத்தில் 330,000 ரூபா பெறுமதியான பகல் போசனம் வழங்கப்பட்டுள்ளது