கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு
கொள்ளுப்பிட்டியில் உடல் ஆரோக்கிய நிலையம் என்ற பெயரில் இயங்கியதாகக் கூறப்படும் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில...


திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவிற்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் உட்பட இருவரும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படவிருந்ததாகக் கூறப்படும் 6 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.