பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளம் 40 வீதத்தினால் உயர்வு
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன்,சம்பள ஆணைக்குழுவின் அனுமதியம் கிடைத்துள்ளது. இந்த ...


இந்த ஆவணங்கள் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலின்; பின்னர் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சம்பளங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸார் 12 மணித்தியாலம் கடமையாற்றி வருகின்றனர். கடந்த எந்தவொரு அரசாங்கமும் வழங்காத அளவிற்கு சம்பளங்களை உயர்த்த இந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
22 ஆண்டுகள் சேவைக் காலத்தை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் சுய விருப்பில் ஓய்வு பெற்றுக்கொள்ள முடியும்.இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. ஏற்கனவே 7000 பேர் ஓய்வு பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் எவ்வித தலையீடும் இன்றி பதவி உயர்வு, இடமாற்றம் போன்றன மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜோன் அமரதுங்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் மிகவும் குறைந்தளவில் காணப்படுவதனால் சம்பள ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டீ.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.