மஹிந்தவின் ஹெலிகொப்டர் கட்டணங்களை செலுத்த முடியாது: சுசில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஹெலிகொப்டர் கட்டணங்களை செலுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுச...

கடந்த தேர்தல் காலத்தில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஹெலிகொப்டர்களுக்கு கட்டணங்கள் செலுத்தப்படாவிட்டால், ஹெலிகொப்டர்களை பெற்றுக்கொண்டவர்களிடம் அறவீடு செய்யுமாறு சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார்.
சொந்த செலவிலேயே மஹிந்த ராஜபக்ஸ ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கடிதமொன்றுக்கு விமானப் படையினர் விமானங்களை வழங்கியிருக்க மாட்டார்கள்.
பெற்றுக்கொண்டவர்களேதான் அந்த செலவுகளை ஈடு செய்ய வேண்டுமென சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்