மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: நாடு திரும்பும் பசில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ச தனக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை ...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ச தனக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் பாரியளவு ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டது.

குறிப்பாக திவிநெகும திட்டத்தில் 6500 மில்லியன் ரூபாவினை தேர்தல் செலவுக்காக பயன்படுத்தியதாக இவருக்கு எதிராக நீதிமன்றில் குற்றம் முன்வைக்கப்பட்டன. இதனால் இவருக்கு எதிராக கடுவெல நீதிமன்றம் பிடியானை பிறப்பித்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இவர் அமெரிக்காவிற்கு தப்பி ஓடினார். இந்நிலையில் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் நாட்டுக்கு திரும்புகின்றார்.

நாட்டுக்கு திரும்பும் பசில் ராஜபக்ச தனக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என அச்செவ்வியில் தெரிவித்திருக்கின்றார்.

இதனிடையே மஹிந்த ராஜபக்சவின் மற்றொரு தம்பியும்,முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமாகிய கோத்தபாய ராஜபக்ச தான் அரசியலுக்கு வரவுள்ளதாக அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 576622954597275037

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item