ஐதேகவும், சுதந்திரக் கட்சியும் கூட்டாக என்னை பழிவாங்குகின்றன! - மகிந்த குற்றச்சாட்டு
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் கூட்டு அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜ...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_127.html
.jpg)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சுமார் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்று முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், கட்சியின் உறுப்பினர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள். இவ்வாறான ஓர் நிலையில் சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பதில் எனக்கு சிக்கல் உண்டு. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படக் கூடாது. மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்டியெழுப்பப்பட்டால் சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.