ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால் இனி கூகுளில் தேடலாம்

அண்ட்ரொய்ட் ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும். கூகுள் நிறுவனம் ...

ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால் இனி கூகுளில் தேடலாம்
அண்ட்ரொய்ட் ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும்.

கூகுள் நிறுவனம் மிகத் திறம் வாய்ந்த தேடுபொறி தளத்துடன், தொழில் நுட்ப உலகில் களம் இறங்கியது.

அதன்பிறகு படங்கள், வரைபடம், செய்திகள், மொழி பெயர்ப்பு என எண்ணற்ற வசதிகளை தந்து இணைய உலகில் ஜாம்பவானாக விளங்கி வருகிறது.

தற்போது ஸ்மார்ட்போன்கள் தொலைந்துபோனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கென பிரத்தியேகமாக ஒரு அப்ளிகேசன் உருவாக்கப்பட்டு இருக்கிறது இதை உங்கள் செல்போனில் நிறுவிக் கொண்டு, அதில் கூகுள் கணக்கின் வழியே உங்கள் ஸ்மார்ட்போன், டெப்லட், கணினி ஆகியவற்றின் தகவல்களை பதிவு செய்து வைக்க வேண்டும்.

பின்னர் எப்போதாவது போன், கணினியை வைத்த, இடம் மறந்துபோனாலோ அல்லது தொலைந்து போனாலோ அவற்றை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம்.

இதற்கு, இருந்த இடத்தில் இருந்துகொண்டே வழக்கமாக கூகுள் தேடல் பக்கத்தில் ‘பைண்ட் மை போன்’ (Find my phone) என்று தட்டச்சு செய்தால் போதும் உடனே ஒரு வரைபட திரை உருவாகும், அதில் தொலைந்த அண்ட்ரொய்ட் போனின் தகவலை குறிப்பிட்டால் அது எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் சில வினாடிகளில் திரையில் காட்டப்படும்.

நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உங்கள் போன் இருக்கிறது என்பது காட்டப்பட்டு விடும் ஒருவேளை உங்கள் மொபைல் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தால் அதில் இருக்கும் ‘ரிங்’ என்ற வசதியை பயன்படுத்தி, உங்கள் மொபைலை செயற்படாமல் பூட்டி வைக்க முடியும் தேவைப்பட்டால் போனில் உள்ள தகவல்களை அழிக்கவும் செய்யலாம்.

அப்பிள் ஐபோன் ஏற்கனவே இது போன்ற சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related

தொழில்நுட்பம் 8025505301210525399

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item