போனில் சார்ஜ் இல்லாவிட்டால் போனை பார்த்து சத்தமாக கத்தினால் சார்ஜ் ஆகிவிடும்

உங்கள் செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டியதில்லை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து...


உங்கள் செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டியதில்லை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பற்றரி சார்ஜ் தீர்ந்து போவதுதான்.

இதை சமாளிப்பதற்கு பலர் 2 போன்களை கையில் வைத்துக்கொண்டு அவதிப்படுகிறார்கள், இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அதன் விளைவாக ஜோர்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் முத்திரை அளவில் இருக்கும் காகித ஒலிவாங்கியை தயாரித்துள்ளார்கள்.

போனில் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த ஒலிவாங்கியை நோக்கி சத்தமாக கத்தும் போது காகிதத்தில் அதிர்வு ஏற்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது, இந்த மின் ஆற்றலை கொண்டு செல்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

ஆனால் இந்த குறைந்த அளவிளான மின் ஆற்றலை கொண்டு முழு பற்றரியையும் சார்ஜ் செய்ய முடியாது.

உற்பத்தி செய்யப்படும் மின் ஆற்றலின் அளவானது ஒலிவாங்கியின் அளவை பொறுத்து மாறுபடும்.

தற்போது ஒரு சதுர மீட்டருக்கு 121 மில்லிவாட்ஸில் உற்பத்தி செய்யப்படுகிறது, தேவையில்லாமல் அதிக சத்தம் ஏற்படும் இடங்களில் இந்த வகையான ஒலிவாங்கியை வைத்து மின் உற்பத்தியிலும் ஈடுபடமுடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

Related

தொழில்நுட்பம் 8989078995971989650

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item