நரேந்திர மோடி அரசுக்கு தில்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி: வைகோ

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவில் ஆம் ஆத்மி கட்சி  வெற்றி பெற்றுள்ளதையடுத்து வரும் 14ம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர...

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவில் ஆம் ஆத்மி கட்சி  வெற்றி பெற்றுள்ளதையடுத்து வரும் 14ம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜிரிவால் முதல்வர் பதவியேற்க உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, நரேந்திர மோடி அரசுக்கு தில்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி கொடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது தில்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. தில்லி மாநில நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.

சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜெண்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.

நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி. தில்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த தில்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை தில்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

Related

75 ஆண்டுகால வாழ்க்கை: கைகோர்த்துக்கொண்டு மரணத்தை தழுவிய தம்பதியினர்

அமெரிக்காவில் 75 ஆண்டுகாலமாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த தம்பதியினர் ஒன்றாக கைகோர்த்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த அலெக்சாண்டர்(9...

தங்கள் தலைவரை கவிழ்க்க சதித்திட்டம் போட்ட ஐ.எஸ் படையினர்: முறியடித்த உளவுத்துறை

ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அபு அல்-பாக்தாதியை கவிழ்க்க திட்டம் தீட்டிய 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பல பகுதிகளை கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ளது...

காதலனிடம் தவறான உறவு வைத்திருந்த பெண்: முகத்தில் ஒரு குத்துவிட்டு, முடியை அறுத்த காதலி (வீடியோ இணைப்பு)

கொலம்பியாவில் தனது காதலனிடம் தவறான தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு காதலி வழங்கிய தண்டனைக் காட்சி இணையதளத்தில் வீடியோவாக வெளியாக தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கொலம்பியாவை சேர்ந்த பெண்மணி ஒ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item