மட்டக்களப்பில் ரயில் மோதி சிறுவன் பலி! -இன்னொருவர் படுகாயம்.
மட்டக்களப்பில், ஏறாவூருக்கும் செங்கலடிக்கும் இடையில் ரயில் மோதி செங்கலடியைச் சேர்ந்த சரவணபவன் சங்கீதன் (வயது 17) என்ற சிறுவன் மரணமடைந்ததுடன்...


இதில் காயமடைந்த இருவரும் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சரவணபவன் சங்கீதன் (வயது 17) என்ற சிறுவன் மரணமடைந்துள்ளான். படுகாயமடைந்த செங்கலடியைச் சேர்ந்த மற்றைய சிறுவனான கே.பிறேமானந்த் (வயது 15) செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.