சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களைக் காப்பாற்ற ஜனாதிபதியின் விசேடதூதராக ரவுப் ஹகீம்!
யெமன் நாட்டவர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மூவரைக் காப்பாற்றும் நோ...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோறள இத்தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். இது போல கடந்த காலங்களில் ரிசானா நபீக் எனும் அபலைப் பெண்ணின் விவகாரம் வருடக்கணக்கில் இழுபட்டு இறுதியில் வயது கூடிய கடவுச் சீட்டில் எதுவித முன் அனுபவமும் இல்லாது சவுதி சென்றிருந்த அவ்விளம் பெண் மரண தண்டணை வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் துணிந்து இறங்கிச் செயல்படுவதற்கு தயங்கிய முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒருவரையொருவர் சாடிக்கொண்டு காலந்தள்ளியது மாத்திரமன்றி மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கூட எனக்குத் தந்திருந்தால் நான் முடித்திருப்பேன் என வீர வசனம் பேசினார்களே தவிர யாரும் உருப்படியாக எதையும் செய்யவோ அல்லது ஜனாதிபதியின் நேரடி தலையீட்டைக் கோரவோ இல்லையெனவும் ரிசானா நபீக்குக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்ட தினத்திலும் தொலைக்காட்சி கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்று இது குறித்த சமூக உணர்வுக்கு பதிலளிக்கத் தவறியிருந்ததாகவும் கடந்த காலங்களில் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் புதிய ஜனாதிபதி இவ்விவகாரத்தில் கவனமெடுத்துள்ளது மாத்திரமன்றி அமைச்சர் ரவுப் ஹகீமைத் தன் பிரதிநிதியாக அனுப்பவும் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.