அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் பிரத்தியோகமாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இவர்கள் இருவர் மாத்திரமே கலந்துகொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பினை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சிப்லி பாறூக் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நாளை காலை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை சிப்லி பாரூக் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கிழக்கு முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹாபீஸ் நசீர் அஹமதிற்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சிப்லி பாறூக் கையெழுத்திட்டிருந்தார்.

இதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் பலத்த எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சிப்லி பாறூக் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.