தேர்தல் முறை மாற்றம் சிறுபான்மைக் கட்சிகளைப் பாதிக்கும்! - அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் கருத்து.
இலங்கையின் தேர்தல் முறைமைகளில் முன்னெடுக்கப்படும் மாற்றங்கள் இலங்கை சிறுபான்மையினருக்கான கட்சிகள் மற்றும் சிறிய அரசியல்கட்சிகளை பாதிக்கும...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_865.html
இலங்கையின் தேர்தல் முறைமைகளில் முன்னெடுக்கப்படும் மாற்றங்கள் இலங்கை சிறுபான்மையினருக்கான கட்சிகள் மற்றும் சிறிய அரசியல்கட்சிகளை பாதிக்கும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கூடி கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, நவசமாஜ கட்சி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த புதிய தேர்தல் நடைமுறைகள் சிறுகட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் தம்மைப் போலவே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் இருந்ததாக இதில் கலந்து கொண்ட டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate