மக்கள் தன்னுடனேயே இருகின்றனர்! என்கிறார் மஹிந்த ராஜபக்ச.
தேர்தலில் தோல்வியுற்றாலும், மக்கள் தன்னுடனேயே இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் மே...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_931.html

தேர்தலில் தோல்வியுற்றாலும், மக்கள் தன்னுடனேயே இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் மேல் மாகாண உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “நான் எந்தக் காலத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்தேன். எனினும் யதார்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டும்.
மக்களுடன் இருந்தால் மட்டுமே எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிர்காலம் உண்டு. கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் கரிசனை கொள்ளாத அரசியல் கட்சிகளுக்கு எதிர்காலம் கிடையாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை நான் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கினேன். எமது கட்சி உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. சிலர் தொழில்களை இழந்துள்ளனர்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எமது கட்சியைச் சேர்ந்தவர்களே. நாம் எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டிய கட்சியொன்றல்ல. கட்சியையும் கட்சி உறுப்பினர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் ஓர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரன். தேசிய நிறைவேற்றுப் பேரவை சட்ட ரீதியான ஒரு நிறுவனம் அல்ல. எனக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் மக்கள் என்னுடனேயே இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate