எனது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் மீது தவறிழைக்கப்பட்டுள்ளதை ஏற்கிறேன்

ஆனால் அதை நான் செய்யவில்லை என்கிறார் மஹிந்த எனது ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஒரு சில தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ளதை நான் ஏற்ற...

ஆனால் அதை நான் செய்யவில்லை என்கிறார் மஹிந்த
எனது ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஒரு சில தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ளதை நான் ஏற்றுக் கொள்­கிறேன். அது நான் செய்த தவ­று­க­ளல்ல. எனது பெயரைக் கூறி இடம்­பெற்ற தவ­றுகள். 



அவ்­வா­றான தவ­று­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டேன் என உறு­தி­ய­ளிக்­கிறேன்.

இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளையும் ஏனைய சமூ­கத்­தி­னரைப் போல் தலை­நி­மிர்ந்து வாழ­வழி சமைப்­பதே எனது இலக்­காகும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் குரு­ணாகல் மாவட்ட வேட்­பா­ள­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

கடந்த சனிக்­கி­ழமை மஹிந்த ராஜ­பக்ஷ குரு­ணாகல் மாவட்ட முஸ்லிம் சமூ­கத்தை  குரு­ணாகல் வில்­கொ­டவில் சந்­தித்தார். குரு­ணாகல் மாந­கர சபை உறுப்­பி­னரும் ஸ்ரீ  லங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பா­ள­ரு­மான அப்துல் சத்­தாரின் தலை­மையில் நடை­பெற்ற குறிப்­பிட்ட கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது;
‘முஸ்­லிம்கள் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் சிந்­தித்து செயற்­பட வேண்டும். நாட்­டுக்கு விரோ­த­மாக செயற்­ப­டக்­கூ­டாது. ஐக்­கிய தேசியக் கட்சி இப்­போது பொய்ப் பிர­சா­ரங்­களைச் செய்து வரு­கி­றது.

இன­வாதக் கருத்­துக்­களைப் பரப்பி வரு­கி­றது. முஸ்­லிம்­களின் விரோதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே. நானல்ல, சர்­வ­தேச முஸ்­லிம்­க­ளி­னதும் எதி­ரி­யான அமெ­ரிக்­கா­வுடன் சேர்ந்து ரணில் செயற்­பட்டு வரு­கிறார்.

ஆனால் நான் அரபு நாடு­க­ளுடன் இருக்­கிறேன். பலஸ்­தீ­னத்தின் நண்­ப­ராக இருக்­கிறேன். ஜெனீ­வாவில் முஸ்லிம் நாடுகள் எமக்கே ஆத­ரவு வழங்­கின. இவற்றை  ஒரு­போதும் நான் மறந்து விட­வில்லை. நான் நன்றிக் கட­னுள்­ளவன்.

ஆனால் முஸ்­லிம்கள் மத்­தியில் என்னைப் பற்றி தவ­றான பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசியக் கட்சி முன்­னெ­டுத்து வரு­கி­றது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட இன­வாதக் கருத்­துக்­களைப் பரப்­பிய பகி­ரங்­க­மாக முஸ்­லிம்­களை எதிர்த்து வந்த சம்­பிக்க போன்ற இன­வா­திகள் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்டுச் சேர்ந்­துள்­ளார்கள்.

அதனால் முஸ்­லிம்­களின் நண்பன் யார் என்­பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்­வரும் எனது ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எந்­த­வித கஷ்­டமும் இடம்­பெற இடம் கொடுக்க மாட்டேன். 

இன்று முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­துக்கு மாத்­தி­ர­மல்ல, ஏனைய இனத்­த­வ­ரதும் வர்த்­த­கத்­துக்கு அடி வீழ்ந்­துள்­ளது. பாதிப்­பேற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்­களின் பிர­தான பொரு­ளா­தாரம் வர்த்­த­கத்­தி­லேயே தங்­கி­யுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்சி இதனை திட்­ட­மிட்டு சிதைத்து வரு­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொய்ப் பிர­சா­ரங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்கும் நீங்கள் எனக்கு வாக்­க­ளிப்­பீர்­களோ தெரி­யாது. (கூட்­டத்தில் கலந்து கொண்­டிந்­த­வர்கள் உங்­க­ளுக்­குத்தான் வாக்கு, நீங்கள் தான் பிர­தமர் என குரல் எழுப்­பி­னார்கள்).

இந்­நாட்டில் முஸ்­லிம்கள் ஏனைய இனத்­த­வ­ருடன் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும். அப்­போ­துதான்  முஸ்­லிம்­ச­மூ­கமும் நாடும் எழுச்சி பெறும். அவ்­வா­றான ஒரு சூழலை உரு­வாக்­கு­வ­தாக நான் உறு­தி­ய­ளிக்­கிறேன். சம­யங்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்கு முடிவு கட்­டப்­படும்.

நாட்டின் அபி­வி­ருத்­திகள் இன்று முடக்­கப்­பட்டு விட்­டன. 58 ஆயிரம் கிரா­மியத் திட்­டங்கள் செய­லி­ழக்கச் செய்யப்பட்டுள்ளன. 15 இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நாடும் நாட்டு மக்களும் முஸ்லிம் சமுதாயமும் இன்றிருக்கும் மோசமான நிலைக்கும் கீழான நிலைக்கும் தள்ளப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றார்.

Related

இலங்கை 5709110815447339610

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item