மஹிந்த மீது ஐக்கிய தேசிய கட்சி பொய் பொட்­ட­லங்­களை அவிழ்த்து விடுகின்றது

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அப்­பட்­ட­மான பொய் புழு­கல்­களை கட்­ட­விழ்த்து மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்­...

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர்
கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அப்­பட்­ட­மான பொய் புழு­கல்­களை கட்­ட­விழ்த்து மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்­க­டித்த ஐக்­கிய தேசியக் கட்சி பொய் பொட்­ட­லங்­களை மீண்டும் அவிழ்த்துக் கொண்­டி­ருக்­கி­றது என முன்னாள் முஸ்லிம் விவ­கார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்தார்.

குரு­ணாகல் வில்­கொ­டவில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­ட­மைப்பின் முஸ்லிம் சமூ­கத்­துக்­கான தேர்தல் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். 

அஸ்வர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;
முஸ்­லிம்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளித்தால் பழி­வாங்­கப்­ப­டு­வார்கள். மஹிந்த முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­களை உடைப்பார். முஸ்லிம் பெண்­களின் பர்­தாவைக் கழற்­றுவார் என் ஐக்­கிய தேசியக் கட்சி பிர­சாரம் செய்து வரு­கி­றது. 

ஆனால் முஸ்­லிம்கள் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் இரவில் விழுந்த குழியில் பகலில் விழ மாட்­டார்கள் என்­பது நிச்சயம்.

பொய் கூறு­வ­தற்கும் ஒரு அள­வி­ருக்க வேண்டும். பொய்க்கும் அள­வுண்டு. பொய் பற்றி குர்­ஆனில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

‘ஹக்க ஹக்கன், பாதில பாதிலன்
இன்­னஹு பாதிலன் கான யகுகா”
பொய் பொய்தான் . உண்மை உண்­மைதான்.

நிச்­ச­ய­மாக பொய் அழிந்தே விடும். இந்த குர்ஆன் வச­னங்ளை முஸ்­லிம்கள் ஊன்றி உணர வேண்டும் பொய்­களைக் கேட்டு வழி­த­வ­றக்­கூ­டாது.

இந்­நாட்டில் தற்­போது முஸ்லிம் கிராமப் புறங்­களில் பெரும் எழுச்­சி­யொன்று ஏற்­பட்­டுள்­ளது. இதனை சென்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் நான் காண­வில்லை. மஹிந்த ராஜபக் ஷ வின் வெற்­றியைக் குழப்­பு­வ­தற்கு முஸ்­லிம்கள் தயா­ராக இல்லை.

இந்த நாடு முஸ்­லிம்­க­ளுக்கும் சொந்தம். அல்­லாஹ்தான் இந்­நாட்டில் என்னைப் பிறக்கச் செய்தான்.

இன்று ¾ வீத­மான முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­க­ளுடன் சூழ வாழ்­கி­றார்கள். அவர்கள் அன்று தொட்டு நல்­லி­ணக்­கத்­து­ட­னேயே வாழ்­கி­றார்கள்.

இது தொடர்ந்தும் நிலை பெற வேண்டும். இல்­லையேல் முஸ்­லிம்கள் பல கஷ்ட நஷ்­டங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும். சிங்­கள முஸ்லிம் உற­வினைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எமது தலைவர்கள் ரி.பி. ஜாயா, சேர் ராசிக் பரீட், டாக்டர் பதியுதீன் மஹ்மூத் போன்றவர்கள் மிகவும் பாடுபட்டு உழைத்தனர் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடக்கூடாது.

Related

இலங்கை 9016036090393273183

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item