இன மதவாதத்தை தூண்டும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையாளர் கடும் எச்சரிக்கை!!
மீறினால் தடை செய்யப்போவதாகவும் தெரிவிப்பு சில அரசியல் கட்சிகள் மதத்தையும், இனங்களையும் அவமதிக்கும் வகையில் தேர்தல் பிரசார நடவடிக்...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_4.html
மீறினால் தடை செய்யப்போவதாகவும் தெரிவிப்பு
சில அரசியல் கட்சிகள் மதத்தையும், இனங்களையும் அவமதிக்கும் வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதன்பின்பு அவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்தால் சம்பந்தப்பட்ட கட்சியையும், அபேட்சகர்களையும் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
நேற்று தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையாளருக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பொதுத்தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போதே தேர்தல் ஆணையாளர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எந்தவொரு அரசியல் கட்சியோ, அபேட்சகரோ எந்தவொரு மதத்தையோ இனத்தையோ அவமதித்து தேர்தல் பிரசாரம் செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.
அபேட்சகர்களை தமிழர், முஸ்லிம், சிங்களவர் என வேறுபடுத்த முடியாது. இது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும். மீறினால் அதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொதுபலசேனாவின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுன (பி.ஜே.பி.) யின் அபேட்சகர் ஒருவர் தேர்தல் பிரசார கூட்டங்களில் அல்குர்ஆனையும், முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வருவதாக ஆர்.ஆர்.டி.அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் தேர்தல் ஆணையாளரிடமும், பொலிஸ்மா அதிபரிடமும் கடந்த ஞாயிற்றுக் கிழமை முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்தே தேர்தல் ஆணையாளர் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படக்கூடாது எனத் தெரிவித்தார்.
மேலும் மாற்றுத்திறனுள்ள (Disabled) வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கும், பாரிசவாதம் போன்ற நோயாளிகளை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.