பச்சிளம் குழந்தையை பந்தை போன்று சுவரில் வீசியடித்த தந்தை
அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது குழந்தையை சுவற்றில் வீசியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_998.html

அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது குழந்தையை சுவற்றில் வீசியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்த பிட்ஸ்பர்க் நகரில் வசித்து வரும் டைலல் டூடி(25) என்ற நபருக்கு, பிறந்து 7 வாரமே ஆன கல்லென் என்ற ஆண் குழந்தை ஒன்றுள்ளது.
சம்பவத்தன்று டைலல், தனது குழந்தையை சுவற்றியில் வீசியடித்துள்ளார், பின்னர் ரத்த வெள்ளத்தில் கதறித்துடித்த குழந்தையை அவரே மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளார்.
குழந்தையின் நிலைமையை பார்த்த மருத்துவமனை இதுகுறித்து பொலிசாரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, டைலரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையின் முகத்தில் காயங்களும், மண்டையோட்டு எலும்பில் முறிவு மற்றும் மூளையில் ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது என்றும், அவன் மூளையில் நிரந்தரமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர், தற்போது குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இக்குழந்தையின் தாயார், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.