பிரதமராவது உறுதியாகிவிட்டதால், மஹிந்தவை இனவாதியென முஸ்லிம்களிடையே சித்தரிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி முயற்சி.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவது உறுதியாகிவிட்டது. இதனை சீர்குலைப்பதற்காக அவரை ஓர்...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_749.html
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவது உறுதியாகிவிட்டது. இதனை சீர்குலைப்பதற்காக அவரை ஓர் இனவாதி என ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம்கள் மத்தியில் பொய்யை கட்டவிழ்த்துவிட முயற்சித்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
குருநாகல் ஜாமி உல் அஸ்ஹர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற மஹிந்த ராஜபக் ஷவுக்கான வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
குருநாகல் மாவட்ட முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை சகோதர மக்களோடும், தமிழ் மக்களோடும் ஒன்று சேர்ந்து வேட்பாளர் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்குவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட முனைந்துள்ளனர் என்பது இந்த மாவட்டத்தில் பல இடங்களுக்கு சென்று வரும் போது அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
மஹிந்த ராஜபக் ஷ ஓர் இனவாதி என இனங்காட்டுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி முனைந்து வருவது ஒரு கேலிக்கூத்தான விடயமாகும்.
ஐ.தே.க.வின் இந்த முயற்சி ஒருநாளும் வெற்றி பெறப் போவதில்லை. இது ஒரு வீணான முயற்சி என்பது ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத் தேர்தல் நாட்டு மக்களுக்கு நன்றே உணர்த்தும்.
மஹிந்த ராஜபக் ஷ அம்பாந்தோட்டை மாவட்டத் தின் மெதமுலன கிராமத்தில் பிறந்தார்.
அவருடைய வீட்டை தொட்டு நிற்கும் வயல் வெளிக்கு அப்பால் இருப்பது யக்கஸ்முல்ல எனும் முஸ்லிம் கிராமமாகும். அம் மக்களோடும் ஏனைய கிராமத்தில் உள்ள மக்களோடும் சிறு வயது முதலே அவர் நன்கு பழகி வந்துள்ளார்.
முஸ்லிம்களுடைய மத கலாசார உணர்வுகளையும் கடமைகளையும் அவர் நன்கு உணர்ந்துள்ளார்.
அதுமட்டுமல்ல, தன் ஊரில் இருந்து கொழும்பு வரும் வழியில் தங்கல்ல, மாத்தறை, காலி, பேருவளை, சீனன்கோட்டை, பாணந்துறை, ஹேனமுல்லை முதலான நகரங்களுக்கு சென்று ஆங்காங்கு முஸ்லிம்களை சந்தித்து வருவது சிறு வயது முதல் ஏற்படுத்திக் கொண்ட பழக்கமாகும்.
இதனை முஸ்லிம்கள் நன்கு அறிவர்.
ஜனாதிபதியாக இருந்த போது கூட தனது நீண்ட நாள் நண்பரும், அவருடைய ஆரம்ப அரசியல் நுழைவுக்காக உதவிக்கரம் நீட்டியவருமான ஹுசைன் சாலி ஹாஜியார் வீட்டுக்கு சென்று சுகவீனமுற்றிருந்த அவரை பார்த்து குசலம் விசாரித்து, குடும்பத்தவர்களோடும் ஏனைய நண்பர்களோடும் மகிழ்ச்சியோடு கலந்துரையாடி வந்ததை அங்குள்ள முஸ்லிம்கள் இன்றும் பேசி வருகின்றனர்.
மர்ஹும் பலீல் ஹாஜியார், அல்ஹாஜ் நௌபல் ஜாபிர் போன்ற நண்பர்களுடைய வீட்டுக்கும் சென்று பழைய கால நட்பின் உயர்வுகளை மீட்டிக் கொள்வதில் என்றும் தவறமாட்டார். இது மஹிந்த ராஜ பக் ஷ முஸ்லிம்கள் சம்பந்தமாக காட்டிவரும் நட்பின் உயர்வினை புடம்போட்டுக் காட்டுகின்றது.
முஸ்லிம்களுடைய விரோதி என மஹிந்த ராஜபக் ஷவை சிருஷ்டிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய பச்சை காற்சட்டைக்காரர்களும் முயற்சித்து வருவது எதிர்வரும் தேர்தலில் அவர்களுக்கு எதிர்பலனைத்தான் அளிக்கும் என்பதில் எமக்கு சந்தேக மில்லை.
குருநாகல் பெரிய பள்ளிவாசலில் அவர் உரை நிகழ்த்தும் போது, முஸ்லிம்களுடைய உணர்வுகளை நன்கு அறிந்துள்ள தான் அவர்களுடைய எதிர்கால சேமநலன்களுக்காக உழைக்க தவறமாட்டேன் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அந்தப் பள்ளிவாசலில் எதிர்பாராதவிதமாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கூடி நின்று தக்பீர் முழங்க அவரை வரவேற்றது அனைவரையும் பிரமிக்கச் செய்த ஒரு சம்பவமாகும்.
எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்க இருக்கின்ற மஹிந்த ராஜபக் ஷவுக்கு இந்நாட்டு முஸ்லிம்களும் தங்களுடைய ஆத ரவை நல்க வேண்டும் எனவும் கூறினார்.
குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் அமைப்பாளர் அப்துல் சத்தார், முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஷ்ஷெய்யத் அலவி மௌலா னாவின் புதல்வர் நகீப் மௌலானா உட்பட இன்னும் சிலரும் உரையாற்றினர்.

Sri Lanka Rupee Exchange Rate